Posts

Showing posts from April, 2018

எங்கள் மேல் செருப்பை வீசினாலும்: சென்னை ரசிகர்களை நெகிழ வைத்த ஜடேஜா

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா உங்கள் மேல் எங்களுக்கு எப்போது அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று டுவிட் செய்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் பீல்டிங் செய்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீது செருப்புகளை வீசினர். இருப்பினும் அந்த செருப்பைக் கண்ட ரவீந்திர ஜடேஜா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கால் பந்து போல் எட்டி உதைத்தார், மற்றொரு வீரரான டூப்ளிசிஸ் கையில் மற்றொரு செருப்பை எடுத்துக் கொண்டு முகத்தை ஒரு மாதிரி பாவனை செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவினஇந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது எங்களுக்கு எப்போதும் அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் இதைக் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த டுவிட்டை வைரலாக்கி வருகின்றனர்.

எங்கள் மேல் செருப்பை வீசினாலும்: சென்னை ரசிகர்களை நெகிழ வைத்த ஜடேஜா

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜா உங்கள் மேல் எங்களுக்கு எப்போது அன்பும், அக்கறையும் இருக்கிறது என்று டுவிட் செய்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியின் போது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் சிலர் பீல்டிங் செய்து கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மீது செருப்புகளை வீசினர். இருப்பினும் அந்த செருப்பைக் கண்ட ரவீந்திர ஜடேஜா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கால் பந்து போல் எட்டி உதைத்தார், மற்றொரு வீரரான டூப்ளிசிஸ் கையில் மற்றொரு செருப்பை எடுத்துக் கொண்டு முகத்தை ஒரு மாதிரி பாவனை செய்தார். அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவினஇந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், அந்த இரண்டு புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்து, சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மீது எங்களுக்கு எப்போதும்அன்பும்அக்கறையும் இருக்கிறதுஎன்றுகுறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அந்த டுவிட்டை வைரலாக்கி வருகின்றனர்.

எங்க ஏரியா உள்ள வராத: மைதானத்தில் இந்திய பிரபலத்தை மறைமுகமாக தாக்கிய பாடல்

Image
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியை காண நடிகர் ஷாருக்கான் மைதானத்திற்குள் நுழைந்தபோது, எங்க ஏரியா உள்ள வராத என்ற பாடல் ஒளிபரப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதனால், போட்டினைய பார்ப்பதற்காக ஷாருக்கான் சென்னை வந்திருந்தார். அவர் சேப்பாக்கம் மைதானத்திற்குள் நுழையும்போது, எங்க ஏரியா உள்ள வராதே என்ற பாடல் ஒளிபரப்பபட்டது. சென்னை எங்க ஏரியா என மறைமுகமாக ஷாருக்கானுக்கு உணர்த்துவதாக இந்த பாடல் அமைந்தது.

போராட்டக்காரர்கள் வீசிய காலணி: கால்பந்து விளையாடிய ஜடேஜா!

Image
சேப்பாக்கம் மைதானத்திற்குள் போராட்டக்காரர்கள் வீசிய காலணியை கால்பந்து போல் உதைத்து ஜடேஜா விளையாடியது தற்போது வைரலாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே நடைபெற்ற போராட்டங்களையும் மீறி ஐபிஎல் போட்டி பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. ஏராளமான ரசிகர்கள் அதைக்காண குவிந்துள்ளனர். இதற்கிடையே நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர், மைதானத்தில் காலணி வீசியும், ஆடைகளை எறிந்தும் காவிரி விவகாரத்திற்காக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தினர். அத்துடன் கட்சிக் கொடிகளையும் உள்ளே கொண்டு சென்று காட்டினர். பின்னர் காலணி வீசிய 4 பேரையும் பொலிசார் கைது செய்து, அப்புறப்படுத்தினர். இதனால் 2 நிமிடங்கள் போட்டி தடைபட்டது. இதனிடையே போராட்டக்காரர்கள் வீசிய காலணி சென்னை அணியை சேர்ந்த ஜடேஜாவின் அருகில் விழுந்தது. அந்த காலணியைக் கண்ட ஜடேஜா, விளையாட்டாக அதை கால்பந்து போல் தட்டி எழுப்பி உதைத்தார். அதற்குள் பந்துகளை எடுத்து வீசும் ஊழியர் ஒருவர் வந்து காலணிகளை எடுத்து சென்றார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

சென்னை போட்டியில் தெரிந்து கொள்ள வேண்டிய சில சுவாரஸ்யங்கள்! video

Image
ஐ.பி.எல் 11-வது தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடேர்ஸ் அணிக்கும் நடந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னிங்க்ஸில், வாட்சன், ராயுடு, பில்லிங்ஸ் மற்றும் ப்ராவோ ஆகியோர் 73 பந்துகளுக்கு 148 ஓட்டங்களை விளாசினர். மொத்த ஸ்ட்ரைக் ரேட் 202.73. ரெய்னா, டோனி, ஜடேஜா ஆகியோர் 47 பந்துகளை சந்தித்து எடுத்த ஓட்டங்கள் 50. மொத்த ஸ்ட்ரைக் ரேட் 106.38. ஐபிஎல் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட போட்டியை இன்றைய போட்டி சமன் செய்தது. இந்த போட்டியில் மொத்தம் 31 சிக்ஸர்கள் விளாசப்பட்டது. இதற்கு முன் 2017ம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டியில் 31 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டிருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் 2010ல் நடைபெற்ற போட்டியில் 30 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது அதிகபட்சமாக இருந்தது. அதிகபட்ச ஓட்டங்களை வெற்றிகரமாக சென்னை அணி சேஸ் செய்த இரண்டாவது பெரிய ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2012ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ...

අද වාර්තා වුන IPL ඉතිහාසයේ වේගවත්ම අර්ධ ශතකය මෙන්න බලන්නකො ප්‍රිති සින්ටාගේ සතුට සුපිරි ඉනිමක් ඒක නම් video

Image
2018 දෙවන තරගයේදීම IPL වාර්තා පොතට වාර්තාවක් එකතු කරන්නට රාහුල්ට හැකියාව ලැබුණා.මෙම තරගයේ කාසියේ වාසිය දිනූ කින්ග්ස් ඉලවන් පන්ජාබි කණ්ඩායම ප්‍රථමයෙන් පන්දුවට පහර දීමට ප්‍රතිවාදී පිලට ආරාධනා කරනු ලැබුවා. 2018 දෙවන තරගයේදීම IPL වාර්තා පොතට වාර්තාවක් එකතු කරන්නට රාහුල්ට හැකියාව ලැබුණා.මෙම තරගයේ කාසියේ වාසිය දිනූ කින්ග්ස් ඉලවන් පන්ජාබි කණ්ඩායම ප්‍රථමයෙන් පන්දුවට පහර දීමට ප්‍රතිවාදී පිලට ආරාධනා කරනු ලැබුවාමේ පිළිබදව සම්පූර්ණ විස්තරය ඇතුළත් වීඩියෝව පහතින් නරඹන්න.ඒ වගේම මිතුරන්ටත් බලන්න ශෙයාර් ක්ලික් කර වීඩියෝව බලන්න.

அஜித் பிறந்தநாள் குறித்து விஜய்யின் அப்பா கூறிய விஷயம்

Image
அஜித் பிறந்தநாள் மே 1, அவரது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். வழக்கம் போல ரசிகர்களை தாண்டி திரையரங்குகளிலும் அவரின் படங்களை ஸ்பெஷலாக திரையிட முடிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் அஜித் மற்றும் ஷாலினி குறித்து பேசியுள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் அஜித்தை மிகவும் பிடிக்கும். விஜய்-அஜித் ஒன்றாக நடித்தபோது என் மனைவி அஜித்திற்குசமையல்செய்து தருவார். ஷாலினியின் அப்பாவும் எனக்கு மிகவும் நெருக்கமானவர். இன்னும் பல, பல பிறந்தநாளை கொண்டாடி, நிறைய சாதனைகள் படைக்கனும். நல்ல சந்தோஷமாக அவர் இருக்க வேண்டும் என்று அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியை உதறித்தள்ளிய தமிழ் ரசிகன்: செய்த ஆச்சரிய செயல்

Image
சென்னை நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர் ஒருவர் எரித்து கழிவறையில் போடுவது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் பல மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்தொடரில் பங்கேற்றுள்ள எட்டு அணியும் அதன் சொந்த மண்ணில் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு முறை மோதும், அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா அணியுடன் மோதவுள்ளது. இப்போட்டி இன்றிரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் இளைஞர்கள் உட்பட பலர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் போட்டியை தமிழக இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று பலர் கூறி வருகின்றனர் இந்நிலையில் போட்டியை பார்க்கப் போகும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக சென்னை ரசிகர் ஒருவர் இன்றைய போட்டியை பார்பதற்காக வாங்கிய டிக்கெட்டை எரித்து கழிவறையில் போட்டுள்ளார். டிக்கெட்டின் ஆரம்ப விலையே 1,300-க்கும் மேலாக உள்ள நிலையில் சிலர் பிளாக்க...